நிலத்தை தோண்டும் போது எம்மவர்களின் எலும்புக்கூடுகள் கிடைக்கப்பெறும். செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் சர்ச்சைக்குரியதாக உள்ளது. இவ்விடயம் தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொண்டுள்ளோம். மறைப்பதற்கு ஏதும் எம்மிடமில்லை என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தின் அபிவிருத்தி பணிகளை நேற்று திங்கட்கிழமை ஆரம்பித்து வைத்ததன் பின்னர் அங்கு உரையாற்றிய ஜனாதிபதி,
எதிர்காலத்தில் இவ்வாறான நிலை தோற்றம் பெறுவதைத் தடுப்பதற்காகவே செம்மணி தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
இனிவரும் காலங்களில் இலங்கையில் இவ்வாறான நிலை ஏற்படக்கூடாது. கொடூரமான அனுபவங்கள் மீண்டும் தோற்றம் பெறாத வகையில் அவை நினைவுகூரப்பட வேண்டும்.
கொழும்பை மையமாகக் கொண்ட அரசாங்கம் தற்போது இல்லை. வடக்கு மக்கள் முன்னர் கொழும்பு அரசாங்கம் உள்ளது. அந்த அரசாங்கத்தால் எமக்கு பயனில்லை. ஆகவே நாம் பிறிதொரு அரசாங்கத்தை அமைப்போம்' என்று குறிப்பிட்டார்கள்.
அது தற்போது முடிந்து விட்டது. அனைத்து இன மக்களையும், சகல மாகாணங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசாங்கமே தற்போது ஆட்சியில் உள்ளது.
பொருளாதாரம், சர்வதேசம் என்ற அடிப்படையில் நூல் பந்து போல் நாடு சிக்கியிருந்தது. அனைத்து பிரச்சி னைகளுக்கும் கட்டம் கட்டமாக அவதானத்துடன் தீர்வு காண்கிறோம். அனைவரும் ஒன்றிணைந்து செயற்ப வேண்டும்
இதேநேரம் தோல்வியடைந்தவர்கள் மீண்டும் என்ன செய்யலாம் என்று திட்டமிடுகிறார்கள். இனவாத அடிப்படையில் வடக்கையும், தெற்கையும் தூண்டி விடுவதற்கு இவர்கள் முயற்சிக்கிறார்கள்.
இனவாத அரசியலுக்குள் நாட்டு மக்கள் சிக்கக் கூடாது.
இனவாத அரசியலால் இந்த நாட்டில் இரத்த வெள்ளம் ஓடியுள்ளது. மக்கள் பெருந்துயரங்களை எதிர்கொண்டார்கள்.
ஆகவே, இனி எவ்விடத்திலும் இனவாதம் தோற்றம் பெறகூடாது. வடக்கு மக்களுக்கு பிரச்சினையுள்ளது என்பதை ஏற்றுக்கொள்கிறோம்.
எமது மீனவர்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து பாதுகாக்க வேண்டும்.இலங்கையின் பிரதான கேந்திரமையமாக கச்சத்தீவு காணப்படுகிறது. கச்சத்தீவு இன்று பிரதான பேசுபொருளாக காணப்படுகிறது.நாட்டின் ஆட்புல எல்லைகளை பாதுகாத்து அவற்றை எதிர்கால தலைமுறையினருக்கு வழங்குவது எமது பொறுப்பாகும்.அந்த பொறுப்பை நிறைவேற்றும் கடப்பாடு எமக்கு உண்டு.
எமது தீவு, நிலம்,ஆகாயம் அனைத்தும் எமது மக்களுக்குரியது. கச்சத்தீவு விவகாரத்தில் எவ்வித அழுத்தங்களுக்கும் நாங்கள் அடிபணிய போவதில்லை என குறிப்பிட்டார்.
இதேநேரம் யாழ்ப்பாணத்துக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டுள்ள ஜனாதிபதிஅனுரகுமார திசாநாயக்க அங்கு நடைபெற்றபல்வேறு நிகழ்வுகளிலும் கலந்து கொண்டார்தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் யாழ்ப்பாணத்தில் தமிழுக்கு முன்னுரிமை கொடுத்ததன் மூலமும், ஜனாதிபதி என்ற அதிகாரத்தைப் பயன்படுத்தித்தனது பெயரைப் பொறிக்காமல், "பொது மக்களின்நிதியைப் பயன்படுத்தி..... ஜனாதிபதியினால் திறந்துவைக்கப்பட்ட...' என்ற நினைவுக்கற்களை திரை நீக்கம்செய்யப்பட்டதன் மூலமும் "மக்களின் ஜனாதிபதி' என்றபாராட்டைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.